அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு வாழ்கையில் முன்னேறப் போராடும் ஒரு ஏழை சிறுவனைப் பற்றிய 87நிமிட திரைப்படம் ஐ ஆம் கலாம். இந்தப் படம் லண்டனில் நடைபெறவுள்ள உலகத் திரைப்பட விழாவில் பங்குபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,இதனுடன் மேலும் 8திரைப்படங்கள்தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட இந்த படம் வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருப்பதாக தகவல். படத்தின் களம் ராஜஸ்தான், அங்கு ஒரு தாபா(dhaba)வில் வேலை செய்யும் சிறுவன் சோட்டு, ஒரு நாள் தொலைக்காட்சியில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறைப்பற்றி அறிகிறான், எவ்வளவு இடற்பாடுகளுக்கு இடையில் அவர் படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்று அறியும் அவன், அவர் போலவே வாழ்வில் நல்ல நிலைக்கு வரவேண்டும், அதற்காக படிக்க வேண்டும் என்று ஆசைகொள்கிறான். அந்த கனவை நோக்கிய பயணமே இந்தப் படம். படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது இந்தப் படம். டெல்லியில் உள்ள ஒரு சேரியில் வசிக்கும் ஹர்ஷ் மயார் என்ற சிறுவன் சோட்டு என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறான். இந்தப் படம் குழந்தை தொழிலாளர்களின் அவலங்களை எடுத்து கூறுவதாக அமையும் என எதிர்பார்க்கிறேன். மேலும் இந்தப் படம் வளரும் நாடுகளில் உள்ள எல்லா மக்களுக்கும் பொருந்தும் விதமாக அமைந்திருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவிக்கிறார்.
நிலவின் ஒளி
கண்ணை மூடி பார்த்தால் கூட நிலவு தெரியும்......! உன் கனவில்......! நிலவின் உருவம் மட்டுமே ......! கண்ணை திறந்து பார்த்தால் தான் தெரியும் நிலவின் ஒளி .......! என் நிஜத்தில் .........! உன் முகம் பிரகாசமாய்
வியாழன், 21 அக்டோபர், 2010
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு
இன் விட்ரோ பெர்டிலைசேஷன் எனப்படும் ஐவிஎப் முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை முறையை உலகிற்கு அறிமுகப்படுதியவர் இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ். 1978ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டஇந்த முறைக்கு இன்று வரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து விட்டன. இன்று ஐந்தில் ஒருவருக்கு வெற்றிகரமாக குழந்தை கிடைக்கும் என்ற நிலைக்கு சோதனைக் குழாய் குழந்தை முறை முன்னேறியுள்ளது.தற்போது 85 வயதாகும் ராபர்ட்எட்வர்ட்ஸ் மனித குலத்துக்குப் பெரும் வரமாக அமைந்துள்ள சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் ராபர்ட்.
இன் விட்ரோ பெர்டிலைசேஷன் எனப்படும் ஐவிஎப் முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை முறையை உலகிற்கு அறிமுகப்படுதியவர் இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ். 1978ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டஇந்த முறைக்கு இன்று வரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து விட்டன. இன்று ஐந்தில் ஒருவருக்கு வெற்றிகரமாக குழந்தை கிடைக்கும் என்ற நிலைக்கு சோதனைக் குழாய் குழந்தை முறை முன்னேறியுள்ளது.தற்போது 85 வயதாகும் ராபர்ட்எட்வர்ட்ஸ் மனித குலத்துக்குப் பெரும் வரமாக அமைந்துள்ள சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் ராபர்ட்.
இன் விட்ரோ பெர்டிலைசேஷன் எனப்படும் ஐவிஎப் முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை முறையை உலகிற்கு அறிமுகப்படுதியவர் இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ். 1978ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டஇந்த முறைக்கு இன்று வரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து விட்டன. இன்று ஐந்தில் ஒருவருக்கு வெற்றிகரமாக குழந்தை கிடைக்கும் என்ற நிலைக்கு சோதனைக் குழாய் குழந்தை முறை முன்னேறியுள்ளது.தற்போது 85 வயதாகும் ராபர்ட்எட்வர்ட்ஸ் மனித குலத்துக்குப் பெரும் வரமாக அமைந்துள்ள சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் ராபர்ட்.
55 மாடி கட்டிடத்திற்கு மேல் குளத்துடன் கூடிய சொகுசு ஹோட்டல் !
உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் தான் . சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குள தடாகம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட 3 மடங்கு பெரியது. உலகிலேயே கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பெரிய நீச்சல் தடாகம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்
டேனியலா கார்சியா
பல் மருத்துவரான தாய்க்கும், சிலி நாட்டின் முக்கியமான நகரமான சாண்டியாகோ நகரத்தில் அமைந்துள்ள 'சிலி பாண்டிஃபிசியா கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில்' மருத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் தந்தைக்கும் மகளாகப் பிறந்த டேனியலா அழகு, அறிவு, ஆற்றல் இவை கலந்த அற்புதக்கலவை. படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டியாக விளங்கிய டேனியலா மிகக்கடுமையான நுழைவுத்தேர்வுகளைத் தாண்டி தன் தந்தை பணியாற்றும் பல்கலைக்கழகத்திலேயே மருத்துவ மாணவியாகச் சேர்ந்தாள். தனது நான்காவது வருடப்படிப்பில் இருந்த டேனியலா, தேர்வுகளுக்கு சிறிது தினங்களுக்கு முன், தன் கால்பந்துக்குழுவின் வற்புறுத்தலின் காரணமாக 2002ம் வருடம், அக்டோபர் முப்பதாம் நாள் 'டெம்யுகோ'நகரத்தில் நடக்கவிருந்த விளையாட்டுப்போட்டிகளுலில் கலந்துகொள்ள தனது கல்லூரி நண்பர்களுடன் புகைவண்டியில் புறப்பட்டாள். டெம்யுகோ நகரத்திற்கு ஏராளமான மாணவமாணவிகள் விளையாட்டுப்போட்டிகளுக்குச் செல்வதற்காக புகைவண்டியில் பழைய, அழுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. மனதில் ஏதோ சொல்லத்தெரியாத ஒரு உறுத்தல் நிலவியபோதும், டேனியல்லா தன் பயணத்தைத் துவக்கினாள்.
சற்று நேரம் கழித்து, அந்தப்பெட்டியில் இருந்த இரு நண்பர்கள், அடுத்த பெட்டியில் தனது குழுவினர் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்ததால் அவர்களுடன் சென்றாள் அவள். அவள் ஒரு பெட்டிக்கும் இன்னொரு பெட்டிக்கும் இருந்த பாதை வழியாகச் செல்ல முயல்வதற்கும், அந்தப் பழைய புகைவண்டிப்பெட்டியில் இருந்த இடைவெளி, வண்டி ஒரு வளைவில் திரும்பியபோது விரிவடைவதற்கும் சரியாக இருந்தது. டேனியல்லாவிற்கு மீண்டும் விழிப்பு வருகையில் அவள் தண்டவாளத்தின் நடுவில் கிடந்தாள். தனது கைகளையும் கால்களையும் அவள் அசைக்க முயல்கையில்...........பேரதிர்ச்சி. அவள் தனது கால்கள், கைகள் அனைத்துமே துண்டாகிக் கிடந்ததை உணர்ந்தாள். மருத்துவ மாணவியான அவள் தனது இரத்த இழப்பு மிகவும் அதிகம் என்பதையும், உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றால் தான் இறந்துவிடுவோம் என்பதையும் உணர்ந்துகொண்டாள். நட்ட நடு இரவில், இருப்புப்பாதையில் கிடக்கும் தான் இன்னொரு புகைவண்டி வந்தால் கண்டிப்பாகப் பிழைக்க மாட்டோம் என்று நினைத்த அவள் பீதியடைவதில் பலனில்லை என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு, தனது உடல் உறுப்புக்கள் துண்டாகியிருந்த பொழுதும், மனம் தளராமல் எப்படியோ ஊர்ந்து தண்டவாளத்தை விட்டு நகர்ந்தாள். பின் 'உதவி உதவி' என்று உரத்த குரலில் கத்தத் தொடங்கினாள்.
பண்ணைப் பணியாளரான ரிகார்டோ தனது மனைவிக்குத் தெரியாமல் புகை பிடிப்பதற்காக தன் வீட்டின் அருகில் இருந்த இரயில் தண்டவாளத்தின் பக்கம் வந்தபொழுது ஒரு பெண் உதவிகேட்டு அலறும் குரல் கேட்டது. அருகில் சென்று அவளைப்பார்த்த அவர் பதறிப்போனார். 'பொறு, நான் உதவியுடன் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு ஓடி, பக்கத்தில் இருந்த பெட்ரோல் நிலையம் சென்று ரான்குவா நகர அவசர உதவி மையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அவசர உதவி மையத்தினர் அதிசயப்படும் அளவு உணர்வுடனும் தெளிவுடனும் இருந்த டேனியலா, தனது பெயர், தாய்தந்தையர் பெயர், முகவரி, தொலைபேசி எண் அனைத்தையும் கூறினாள். மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையுமுன், 'நான் மீண்டும் நன்றாக ஆகிவிடுவேனில்லையா?' என்று அவள் கேட்டபொழுது அன்பு நிறைந்த பார்வையும் ஆறுதல் அளிக்கும் குரலும் உடைய மருத்துவர் ஒருவர் 'நீ கண்டிப்பாக குணமாகிவிடுவாய்' என்று கூறியபின்தான் 'இனி தான் செய்வதற்கு ஒன்றுமில்லை, மருத்துவர்கள் தன்னைக் கவனித்துக்கொள்வார்கள்' என்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.
ஆறு வாரங்கள் ரான்குவா மருத்துவமனையில் தங்கியிருந்த டேனியல்லா, உறுப்புகளைச் சீரமைப்பதற்கும், செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்கும் புகழ்பெற்ற பிலடெல்பியா நகரத்தில் அமைந்திருந்த, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மோஸ் சீரமைப்பு நிலையத்தில் அவள் தந்தையால் சேர்க்கப்பட்டாள். காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணிவரை அவளுக்குப் பல்வேறு விதமான பயிற்சிகள் நடப்பதற்கும், உணவு உண்பதற்கும், உடையணிவதற்கும் பற்பல மருத்துவக்குழுக்களால் தொடர்ந்து கொடுக்கப்பட்டன. பிளாஸ்டிக்கினால் ஆன செயற்கை உறுப்புகள் அவளுக்குப் பொருத்தப்பட்டு, மருத்துவரின் உதவியோடு எழுந்து நின்ற பொழுது அவள் அனுபவித்த மகிழ்ச்சி அவளுக்கே அதிசயமாக இருந்தது. விபத்துக்கு முன்பு கூட இத்தகைய ஒரு பெரிய மகிழ்ச்சி தனக்குக் கிடைத்ததில்லை. ஒரு துயரமான நிகழ்வு இத்தனை இன்பத்தைத் தனக்கு அளிக்க முடியும் என்பது தனக்கு வினோதமாக இருக்கிறது என்று தன் தாயிடம் கூறினாள் டேனியல்லா.
பிலடெல்பியா மோஸ் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் தங்கியிருந்த பின் தனது ஊர் திரும்பிய டேனியல்லா, சில மாதங்களுக்குப் பின் மீண்டும் அங்கு சென்று தனது செயற்கை உறுப்புகளில் சில நுட்பமான மாறுதல்களைச் செய்துகொண்டாள். ஒரு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது மருத்துவப்படிப்பைத் தொடர்ந்த அவள், விபத்துக்கு முன்பை விட அதிக மதிப்பெண் பெற்று இப்பொழுது தன்னைப்போலவே விபத்தினால் உறுப்புக்களை இழந்தவர்களுக்கான மருத்துவராகத் திகழ்கிறாள்.
இருபத்தேழு வயதாகும் டேனியல்லா, தனக்குப் பிடித்த பொழுதுபோக்கான மோட்டார்பைக் சவாரி செய்வது முதல், தனது நோயாளிகளைப் பரிசோதனை செய்வது வரை, தனக்குத் தானே அலங்காரம் செய்து கொள்வது, சமைப்பது, எழுதுவது எல்லாம் தனது செயற்கைக் கையில் பொருத்தப்பட்டுள்ள கொக்கி போன்ற அமைப்பின் உதவியால்தான். 'இந்தக் கொக்கியைக்கொண்டு தொடும்பொழுதுகூட என்னால் நோயாளியின் உடலில் உள்ள வேறுபாடுகளை உணரமுடிகிறது. ஆனால் அந்த உணர்ச்சியை என்னால் விளக்க முடியாது' என்று சொல்லும் டேனியல்லா, தான் காதலித்த 'ரிகார்டோ ஸ்ட்ர'பை மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். 'அந்த விபத்துக்குப் பின் தனது இழப்பை எண்ணி அழுதுகொண்டு இருந்திருந்தால் ஒருவேளை எங்கள் காதல் முறிந்திருக்கலாம். ஆனால் டேனியல்லாவின் அசாதாரணமான தைரியம், அந்த விபத்து அவளது வாழ்க்கையைக் குலைக்கவிடாமல் செய்து விட்டது. இப்பொழுது என் வாழ்நாள் முழுவதும் நான் டேனியல்லாவுடன்தான் வாழ விரும்புகிறேன்' என்கிறார் ரிகார்டோ.
தனது அனுபவத்தை எழுதி டேனியல்லா வெளியிட்ட வாழ்க்கை வரலாறு, ஏராளமான பதிப்புகள் விற்று, சாதனை படைத்துள்ளது. தினமும் பலரிடமிருந்தும் அவளது வாழ்க்கை தங்களை எப்படி ஊக்குவித்தது என்று எழுதும் கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் குவிகின்றன. 'என் கதை இத்தனை பேருக்கு ஊக்கமளிக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.' என்று ஆச்சர்யமடைகிறாள் டேனியல்லா.
தான் இழந்தது குறித்த வேதனையில் மூழ்காமல் தன் மருத்துவர் எஸ்க்வெனாசி கூறிய வரிகளான 'நீ உன் வாழ்க்கையை எப்படி அமைக்கிறாயோ அப்படித்தான் உன் வாழ்க்கை இருக்கும்' என்ற வரிகளை மனதில் கொண்டு, தனது விபத்தைக்கூட ஒரு வியக்கத்தக்க பரிசு என்று கருதி ஆனந்தமாக வாழும் டேனியல்லா கார்சியாவைப் பார்த்து, நாம் அனைவரும் வாழ்க்கையை நிறைவுடன் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
Thanks to Eezhanesan
வேலைவாய்ப்பு செய்திகள்
1.கப்பல்படையில் பைலட் பணி
கேரளா மாநிலம் ஏழி மலையிலுள்ள இந்திய கப்பல் படை அகாடமியில் காலியாக உள்ள பைலட் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி:15.11.2010
1.கப்பல்படையில் பைலட் பணி
கேரளா மாநிலம் ஏழி மலையிலுள்ள இந்திய கப்பல் படை அகாடமியில் காலியாக உள்ள பைலட் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி:15.11.2010
1.பணியின் பெயர்:pilot(Indian Navy Short Service Commission)
வயது வரம்பு:19முதல் 23 வயதுக்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :குறைந்தது 65 %மதிப்பெண்களுடன் ஏதாவதொரு
பட்டப்படிப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.+2 வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
இணையதள முகவரி:www.nausena-bharti.nic.in
2.டிகிரி தகுதிக்கு கப்பல் படையில் வேலைவாய்ப்பு:
இந்திய கப்பல் படையில் ஏவியேஷன் பிரிவில் observer officer பணியில் சேர திருமணமாகாத இந்திய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: observer officer
கல்வித்தகுதி :கணிதம்,இயற்பியல் பாடங்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் குறைந்தது 65 %மதிப்பெண்களுடன் எதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க் வேண்டும்.
வயது:19-லிருந்து 23 -க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்:8.11.2010
கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி:www.nausena-bharti.nic.in
3.இந்தியன் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணி
முன்னணி பொது துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள புரபேஷனரி அதிகாரி பணியிடங்களை
நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்:probationary officer
காலியிடங்கள்:850
வயது:21முதல்30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:ரூ.14,500-25,700
கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தது 55 %மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:11.11.2010
மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: www.indianbank.in
4.ஓரியண்டல் வணிக வங்கியில் 322 புரபேஷனரி ஆபீசர் பணி
ஓரியண்டல் வணிக வங்கியில் புரபேஷனரி ஆபீசர் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள 322 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:10.11.2010
பணியின் பெயர்: புரபேஷனரி ஆபீசர்
காலியிடங்கள்:322
வயது வரம்பு:-21-லிருந்து 30-வயதுக்குள்ளிருக்க வேண்டும்
தகுதி:ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.அறிவியல் பட்டதாரிகளுக்கு தேர்ச்சி விழுக்காடு 60 %-மும் ,இதர பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு மதிப்பெண் விழுக்காடு 55 %மாகவும் இருக்க வேண்டும். போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.கணினி சான்றிதழ்கள் அவசியம் .
கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி:www.obcindia.co.in
5. பெல் நிறுவனத்தில் ஆர்ட்டிசான் பணியிடங்கள்
பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள ஆர்ட்டிசான் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :525
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :27 .10 .2010
ஆன்லைன் விண்ணப்பங்கள் தபாலில் சென்றடைய வேண்டிய கடைசி நாள் :04 .11 .2010
பிட்டர் :254
வெல்டர் -132
டர்னர் -24
மெஷினிஸ்ட்-43
எலக்ட்ரிசியன்-24
கிரேன் ஆப்பரேட்டர்-கம்-ரிகர் -30
இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் -3
பர்னஸ் ஆப்பரேட்டர்-10
டீசல் மெக்கானிக்-2
27 வயதுடையவராக இருக்க வேண்டும்.அரசு விதிகளின் படி வயதுத்தளர்வு உண்டு.10 ஆம் வகுப்பு தகுதியுடன் சம்பந்த்தப்பட்ட டிரேடில் 60 % மதிப்பெண்களுடன் தேசிய டிரேடு சான்றிதழும்(NTC ),தேசிய பழகுநர் சான்றிதழும்(NAC )
பெற்றிருக்க வேண்டும்.
இணையதளமுகவரி : http://careers.bhel.in
6. ESI கழகத்தில் எழுத்தர் பணி
மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Employees State Insurance கழகத்தின் கேரளா பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் :Lower Division Clerk (LDC )
காலியிடங்கள் :54
சம்பளம் :ரூ.5200 -20200
18 -27 வயதுக்குள் இருக்க வேண்டும்.வயது உச்ச வரம்பின் படி வயது தளர்வு உண்டு.+2 தகுதியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.கம்ப்யூட்டரில் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :25 .10 .2010
ஆன்லைன் விண்ணப்பங்கள் தபாலில் சென்றடைய வேண்டிய
கடைசி நாள் :01.11 .2010
7. பொறியியல் /முதுகலை பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் சயின்டிஸ்ட் இன்ஜினியர் பணி
பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
1.Scientist/Engineer – 2
2.Thermal Engineering-2
3.Aerospace Engineering – 5
4. Power Electronics-5
5.Industrial Engineering & Management -2
6. Aerospace Engineering-8
7.Electrical Engineering-1
8.Chemaistry/Electro Chemistry – 2
35 வயதுக்குள் இருக்க வேண்டும்.வயது உச்ச வரம்பின் படி வயது தளர்வு உண்டு. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகுதிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியானவர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கபடுவர்.
கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகுதிகளுக்கு
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :20 .10 .2010
8. குறுகிய கால இலவசத் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
பெரம்பலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சார்பில், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அக். 1-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பிட்டர், எலெக்ட்ரீஷியன், பர்னர், இயந்திர வேலையாள் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சியில் பங்கு பெற, குறைந்தபட்ச கல்வி தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 14 வயது நிறைவடைந்தவர்கள் சேரலாம். 60 மணி நேரம் முதல் 650 மணி நேரம் வரை தொழில் பயிற்சி பெறலாம். மாலையில் 3 மணி நேரம் அல்லது பயிற்சியாளர்களின் தேவையின் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படும்.
பயிற்சி பெற விருப்பம் உள்ள நபர்கள் தங்களது கல்வி சான்றிதழின் அசல் மற்றும் நகலுடன், அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் செல்ல வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு - 04328-290590 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
9. வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு கால அவகாச சலுகை.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதை 2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு, தமிழக அரசு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதனடிப்படையில், பழைய பதிவு மூப்புடன் பதிவு அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். ஏற்கெனவே, 04.10.2010-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 02.09.2010 முதல் 14.09.2010 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால், தற்போது அதற்கான கால அவகாசம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, 2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 19.10.2010 ம் தேதி வரை, நாள்தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நேரில் சென்று விண்ணப்பங்கள் அளித்து புதுப்பித்துக்கொள்ளலாம்.
இதற்கு வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி, அத்துடன் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையின் அசல் மற்றும் ஜெராக்ஸ் இணைத்து அளிக்க வேண்டும். மேலும், 19.10.10-ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
10. தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இதன் மூலம் டாக்டர்கள் ,இன்ஜினியர்கள்,கொத்தனார்கள் ,தச்சர்கள் என பலர் வெளிநாட்டில் பணியமர்த்தப் பட்டுளனர். வெளிநாடுகளில் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்யும் நேரம் மற்றும் செலவுகளை தவிர்க்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.இந்த சிறப்பு முகாம்களில் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் விண்ணபிக்கலாம்.இதில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள் .பாஸ் போர்ட் ஆகியவற்றின் நகல் மற்றும் 4 புகைப்படத்துடன் கொண்டு வர வேண்டும்.பாஸ்போர்ட் இல்லாதவர்களும் ,முறையான தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
For Contact:9940393617,9952910460,9443690272
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)